இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் பொட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி நேற்று முன்தினம் (ஜூலை 02) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து 587 ரன்களை அடித்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் களம் இறங்கினர்.
இதில் கேஎல். ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து வந்த கருண் நாயார் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் சுப்மன் கில் களத்திற்கு வந்து ஜெய்ஸ்வாலுடன் கைக்கோர்த்தார். இவர்களது கூட்டணி நல்ல ரன்களை சேர்த்தது. அரைசதம் கடந்து சதத்தை நோக்கி சென்ற ஜெய்ஸ்வால் எதிர்பாராத விதமாக பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 107 பந்துகளில் 87 ரன்களை அடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் களத்திற்கு வந்தார். இந்த மைதானத்தில் ரெக்கார்டுகளை வைத்திருக்கும் பண்ட் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்ப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில், அவர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும் மறுபக்கம் சுப்மன் கில் நின்று அணிக்கு ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார். அவர் சதம் கடந்த கில் அதனை இரட்டை சதமாகவும் மாற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவருடன் சிறப்பாக விளையாடிய ஜடேஜா 89 ரன்களை அடித்தார். இறுதியில் இந்திய அணி 587 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து இன்னிங்ஸ்
இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை பிடிக்க களத்திற்கு வந்தது. தொடக்கமே அந்த அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜாக் கார்லி 19, பென் டக்கெட் 0, ஓலி போப் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து அந்த அணியின் நம்பிக்கை வீரர் ஜோ ரூட்டும் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்திற்கு வந்த பென் ஸ்டோக்ஸும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இங்கிலாந்து அணி அவ்வளவுதான் 200 ரன்களுக்குள் ஆட்டமிழந்துவிடும் என நினைத்த நிலையில், ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் அதிரடியாக விளையாடி வருகின்றனர். ஜேமி ஸ்மீத் 80 பந்தில் சதம் அடுத்து வேகமாக சதம் அடித்த மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக கில்பர்ட் ஜெசோப் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 76 பந்திலும் ஜானி பேரிஸ்டோவ் நியூசிலாந்துக்கு எதிராக 77 பந்திலும் ஹாரி புரூக் 80 பந்திலும் சதம் அடித்துள்ளனர்.
என்ன செய்ய போகிறது இந்தியா?
தற்போது இங்கிலாந்து அணி 250 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டது. ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் சதம் விளாசி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அவர்கள் 300 ரன்கள் பின்தங்கி உள்ளனர். இவர்களின் விக்கெட்டை இந்திய அணி வீழ்த்த வேண்டும். அப்போதுதான் இந்திய அணி வலுவான முன்னிலை வகிக்க முடியும். இவர்கள் இருவரும் களத்தில் நிற்பது ஆபத்தே. இவர்கள் 580 ரன்களை துரத்துவது கடினம் என்றாலும் நெருங்கி செல்ல முடியும். எனவே இவர்களை வீழ்த்த இந்திய அணி கண்டிப்பாக ஏதேனும் ஒரு திட்டத்தை கையில் எடுக்க வேண்டும்.
மேலும் படிங்க: டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியல்!
மேலும் படிங்க: விராட் கோலி ரெக்கார்டை தகர்த்த சுப்மன் கில் – அடி தூள்