ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆவியை விரட்டுவதாகக் கூறி ஆசிய சமூகத்தினரைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜூன் மாதம் சிட்னி நகரைச் சேர்ந்த 77 வயது மூதாட்டியிடம் இருந்து பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர், ஆவியை விரட்டுவதாகக் கூறி வீட்டிற்கு வந்த ஒரு பெண் அந்த மூதாட்டியிடம் இருந்த பணம் மற்றும் பொருட்களை மூட்டையாகக் கட்டி பூஜையில் வைக்குமாறு கூறியுள்ளார். […]
