டெல்லியில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு எதிரொலி: பழைய சொகுசு கார்கள் குறைந்த விலையில் விற்பனை

புதுடெல்லி: டெல்​லி​யில் காற்று மாசு அதி​கரிப்பை கட்​டுப்​படுத்த 10 ஆண்​டு​கள் பழைய டீசல் மற்​றும் 15 ஆண்​டு​கள் பெட்​ரோல் வாக​னங்​களுக்கு பெட்​ரோல் பங்க்​கு​களில் எரிபொருள் வழங்க டெல்லி அரசு தடை விதித்​தது.

இதற்கு பொது​மக்​களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்த நிலை​யில், அரசு உத்​தரவு நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், பழைய வாக​னங்​களுக்கு எப்​போது வேண்​டு​மா​னாலும் தடை வரலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதையடுத்து தங்​களு​டைய பழைய வாக​னங்​களை டெல்​லி​வாசிகள் அவசர அவசர​மாக விற்​ப​தில் மும்​முர​மாக உள்​ளனர். ரூ.1 கோடிக்கு மேல் கொடுத்து வாங்​கிய மெர்​சிடஸ் உள்​ளிட்ட சொகுசு வாக​னங்​கள் வந்த விலைக்கு விற்​கும் நிலை உரு​வாகி உள்​ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் டெல்லி பழைய வாகன விற்​பனை​யாளர்​கள் வட்​டாரம் கூறும்​போது, ‘‘டெல்லி அரசின் ஸ்கி​ராப் பாலிசி​யால் 10, 15 ஆண்​டு​களை நெருங்​கும் பழைய டீசல், பெட்​ரோல் வாக​னங்​கள் பறி​முதல் செய்​யப்​படும் என்று தகவல் வெளி​யான​தால், வாகன உரிமை​யாளர்​கள் அச்​சம் அடைந்​துள்​ளனர்.

எனவே, பழைய வாக​னங்​களை கிடைத்த விலைக்கு விற்க துடிக்​கின்​றனர். பல கோடிகளில் வாங்​கப்​பட்ட மெர்​சிடஸ் வாக​னங்​கள் இன்று வெறும் ரூ.3 லட்​சத்​துக்கு கூட விற்​பனைக்கு உள்​ளது. வெளி​மாநிலங்​களில் இதன் விலை இன்​றும் ரூ.20 லட்​சம் வரை விற்​கப்​படு​கிறது. இதனால், வெளி மாநிலங்​களில் இருந்து வழக்​கத்​துக்கு மாறாக பழைய வாக​னங்​கள் குறித்து அதி​கம் பேர் விசா​ரிக்​கின்​றனர்’’ என்​றனர்.

டெல்​லி​யில் பழைய வாக​னங்​கள் குறித்த அச்​சம் நில​வி​னாலும், பிற மாநிலங்​களில் மேலும் 5 ஆண்​டு​களுக்கு உரிமம் புதுப்​பிக்​கப்​படு​கிறது. இதன் காரண​மாக, டெல்​லி​யில் பழைய வாக​னங்​கள் விற்​பனை பல மடங்கு அதி​கரித்​துள்​ளது. இங்​கிருந்து தமிழ்​நாடு, கர்​நாடகா​வுக்கு அனுப்​பப்​படும் பழைய வாக​னங்​கள் எண்​ணிக்​கை​யும் அதி​கரித்​துள்​ளது.

பழைய வாக​னங்​களுக்​கான பதிவு​களை நீட்​டிக்க அதிக கட்​ட​ணங்​களை மத்​திய அரசு நிர்​ண​யித்​துள்​ளது. இதன் காரண​மாக மற்ற மாநிலங்​களி​லும் டெல்​லியைப் போல் பழைய வாக​னங்​களுக்​கானக் கட்​டுப்​பாடு​கள் அதி​க​மாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பழைய வாக​னங்​கள் அகற்​றப்​படு​வால் புதிய வாக​னங்​களின் உற்​பத்தி மற்​றும் விற்​பனை​யும் அதி​கரித்து வரு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.