திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி (RTO) தனது மனைவியுடன் சேர்ந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். RTO சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பிரமிளா இருவரும் நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சுப்பிரமணியின் மனைவி பிரமிளா ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். […]
