ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!

ஐபிஎல்லில் கடந்த இரண்டு சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவர் யாஷ் தயாள். அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். நடப்பாண்டில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதற்கு இவரது பங்களிப்பும் முக்கியமாக இருந்தது. 

யாஷ் தயாள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது. இந்த நிலையில், யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மாதம் 21ஆம் தேதி ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது காசியாபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உத்தரபிரதேச முதல்வரின் குறைதீர் இணையதளத்தில் புகார் பதிவு செய்தார். 

அவர் ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் அளித்த புகாரில்,  யாஷ் தயாளும், நானும் காதலித்தோம். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னுடம் உடலுறவு வைத்தார். அவரது குடும்பத்தினருடனும் அறிமுகம் செய்தார். அவர்களும் என்னை மருமகளாக ஏற்றுக்கொள்வதாக கூறினர். இதனை நம்பி யாஷ் தயாளுடன் உறவு வைத்தேன். ஆனால் அவர் என்னை எமாற்றிவிட்டார். இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றேன். வாழ பிடிக்கவில்லை. மேலும், பிற பெண்களுடன் அவருக்கு இருக்கும் உறவு குறித்து அறிந்து மனஉளைச்சலுக்கு ஆளானேன் என கூறி இருந்தார். 

இதையடுத்து வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காசியாபாத் போலீஸ் துணை கமிஷனர் பட்டீல் நிமிஸ் தஷரத் கூறுகையில், யாஷ் தயாளிடம் விசாரணை நடத்தி உள்ளோம். அவர் மீது பிஎன்எஸ்  பிரிவு 69ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

மேலும் படிங்க: தந்தையால் கிரிக்கெட்டுக்கு வந்த 7 டாப் வீரர்கள்.. யாரெல்லாம் தெரியுமா?

மேலும் படிங்க: கெத்து காட்டிய இந்த 3 TNPL வீரர்கள்… மினி ஏலத்தில் IPL அணிகள் நிச்சயம் குறிவைக்கும்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.