புதுடெல்லி,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், விமானப் பணியாளர்கள் உள்பட 241 பேர் பலியாகினர்.
மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரிக் கட்டடம் மற்றும் குடிருப்புப் பகுதிகளில் இருந்த 19 பேர் பலியாகினர் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், விமான விபத்து நடைபெற்று கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை இன்று சமர்பித்துள்ளது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது வெளியில் மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.