தினேஷ் கார்த்திக்கின் சோக கதை.. கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன் ரவி சாஸ்திரி சொன்ன பகீர்!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது வரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.இந்த நிலையில், இத்தொடரின் மூன்றாவது போட்டி, ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. 

இந்த சூழலில் இப்போட்டி குறித்து பேசுவதற்காக தினேஷ் கார்த்திக், நாசர் உசேன் மற்றும் ரவி சாஸ்திரி மற்றும் மைக்கேல் அத்தர்ட்டன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தங்களுடைய கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடிய அனுபவம் குறித்து நாசர் உசேன் மற்றும் தினேஷ் கார்த்திக் பகிர்ந்துகொண்டனர். 

அப்போது பேசிய இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் உசேன், இளம் வீரர் அண்டிரூ ஸ்டார்ஸ் அணிக்கு வந்திருந்தார். அதனால் எனக்கு அணியில் இடம் கிடைக்காது என முடிவு செய்து பயிற்சியாளர் டங்கன் பிளச்சரை சந்தித்தேன். அப்போது நான் கூறினேன், நாளை தான் எனக்கு கடைசி டெஸ் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன் என்றேன். அதற்கு பிளச்சர், நாசர் நீ நன்றாக தான் விளையாடுகிறாய், பிறகு ஏன் அப்படி முடிவு எடுக்கிறாய் என கூறுவார் என நினைத்தேன். ஆனால், அவர் நான் நினைத்ததற்கு மாறாக, நினைப்பதெல்லாம் வேண்டாம், நாளை தான் உனது கடைசி டெஸ்ட் போட்டி என கூறிவிட்டார். உடனே நான் நன்றி என கூறிவிட்டு வந்துவிட்டேன். 

இதையடுத்து பேசிய தினேஷ் கார்த்திக், என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை நான் லண்டன் லார்ட்ஸில் தான் விளையாடினேன். நீங்கள் பயிற்சியாளரை சந்தித்து உங்கள் ஓய்வு முடிவை கூறினீர்கள். ஆனால், பயிற்சியாளர் என்னை சந்தித்து இனி வரும் டெஸ்ட் போட்டிக்கு நீ தேவையில்லை. இதுதான் உனது கடைசி டெஸ்ட் போட்டி என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிவிட்டு சென்றார் என கூறினார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் 2004ஆம் ஆண்டு அறிமுகமானார். 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டிதான் கடைசி போட்டியாக இருந்தது. 14 ஆண்டுகளில் வெறும் 26 டெஸ்ட் போட்டிகளில்தான் அவர் விளையாடி இருக்கிறார். தோனி மற்றும் விர்தமன் சாகா இருந்ததால், தினேஷ் கார்த்திக்கிற்கு அவ்வபோதே வாய்ப்பு கிடைத்தது.2018ஆம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்டில் ரிஷப் பண்ட் அறிமுகமானார். அவர் அறிமுகமான 4வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். அதன் பின் தவிர்க்க முடியாத வீரராக அவர் மாறினார். தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர், 1025 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்கள் அடங்கும். 

மேலும் படிங்க: லார்ட்ஸில் கங்குலி, கபில்தேவ் வரலாற்றை ரிக்கிரியேட் செய்வாரா சுப்மன் கில்?

மேலும் படிங்க: தந்தையால் கிரிக்கெட்டுக்கு வந்த 7 டாப் வீரர்கள்.. யாரெல்லாம் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.