இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டெடுக்க மிக முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளார். அதன்படி, 2025/26 உள்நாட்டு சீசனுக்கு முன்னதாக, அவர் மும்பை அணியை விட்டு மகாராஷ்டிரா கிரிக்கெட் அணியில் சேரும் முடிவை அறிவித்துள்ளார். இந்த மாற்றத்தின் காரணமாக பிருத்வி ஷா இனி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடவுள்ளார். மும்பை கிரிக்கெட் அசோசியேஷனில் (MCA) தனது ஆரம்பகால கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்த பிரித்த்வி, இந்திய அணி சில போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது, அவர் மும்பை கிரிக்கெட் அசோசியேஷனிடம் இருந்து NOC (No Objection Certificate) பெற்றதற்குப் பிறகு, மகாராஷ்டிரா அணியில் இணைந்துள்ளார்.
மேலும் படிங்க: இங்கிலாந்தில் மாஸ் காட்டிய டாப் 8 இந்திய பௌலர்கள்… முதலிடத்தில் யார் தெரியுமா?
“மகாராஷ்டிரா எனக்கு புதிய வாய்ப்புகளை தரும்” – பிருத்வி ஷா நம்பிக்கை
மஹாராஷ்டிரா அணியில் இணைந்த பிறகு பிருத்வி ஷா கூறியதாவது, “இந்த கட்டத்தில் மகாராஷ்டிரா அணியில் சேருவது எனது வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறேன். கடந்த ஆண்டுகளில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கும், ஆதரவுக்கும் மும்பை கிரிக்கெட் அசோசியேஷனுக்கு நன்றி கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அணியில் பிரித்த்வி ஷா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் ஓப்பனராக களமிறங்க உள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இவர்கள் இருவரும் இந்திய அணியில் ஓப்பனிங் இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். தற்போது ருதுராஜ், மூன்று ஃபார்மாட்களிலும் மீண்டும் அணியில் இடம் பெறுவதை குறிக்கோளாக வைத்துள்ள நிலையில், பிரித்த்வி ஷா தேசிய அணிக்குள் இடம் பெறுவதிலிருந்து சற்றே பின்தங்கியுள்ளார்.
அணியில் இடமில்லாமல் தொடர்ந்த தோல்விகள்
2024/25 சீசனில் பிரித்த்வி ஷா இரண்டு முறை அணியில் இருந்து நீக்கப்பட்டார். ரஞ்சி டிராபி தொடக்கத்தில் அவர் இடம் பெற்றிருந்தாலும், சில ஆட்டங்களுக்கு பிறகு அணியில் தனது இடத்தை இழந்தார். பின்னர் சையத் முஷ்தாக் அலி டிராபிக்குத் திரும்பிய அவருக்கு, விஜய் ஹசாரே டிராபியில் இடம் வழங்கப்படவில்லை. மேலும் ஆச்சரியமாக, 2025 IPL மெகா ஏலத்தில் பிருத்வி ஷாவை எந்த ஒரு அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதன் காரணமாக அவரது சீசன் ஆரம்பத்தில் முடிவடைந்தது. பிறகு, IPL முடிவுக்கு பிறகு நடைபெற்ற மும்பை T20 லீக்கில் மட்டுமே அவர் பங்கேற்றார்.
2025/26 சீசன் ரஞ்சி டிராபி
துலீப் டிராபி அணிகளில் பிருத்வி ஷாக்கு இடமில்லை என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அவர் 2025 அக்டோபர் மாதத்தில் ரஞ்சி டிராபி தொடங்கும் வரை எந்த போட்டியிலும் பங்கேற்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில், ருதுராஜ் தலைமையில் புதிய அணியில் சேரும் பிரித்த்வி ஷா, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் சீரமைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். பிரித்த்வி ஷா தனது இரண்டாவது வாழ்க்கையை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை காலமே பதிலளிக்க வேண்டும்.
மேலும் படிங்க: PPL2: நடப்புச் சாம்பியன் மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸுக்கு முதல் வெற்றி!