Ind vs Eng 3rd Test: இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று 1+1 என்ற கணக்கில் உள்ளன. இந்த நிலையில், வரும் ஜூலை 10ஆம் தேதி, இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.
இரு அணிகளும் தலா 1 போட்டி வென்றுள்ளதால், இப்போட்டி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு ஜஸ்பிரித் பும்ரா துருப்பு சீட்டாக இருப்பார் என முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் நாசர் உசேன் தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர், 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவை சேர்க்காமல் எப்படி இந்திய அணி 20 விக்கெட்களை வீழ்த்த போகிறார்கள் என்ற கேள்வியை பலரும் கேட்டார்கள். ஆனால், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 20 விக்கெட்களையும் வீழ்த்தி தற்போது இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. தற்போது லார்ட்ஸில் நடக்க இருக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு துருப்புச் சீட்டாக பும்ரா இருப்பார்.
லார்ட்ஸ் மைதானத்தில் அவர் ஏற்கனவே அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். இந்த மைதானத்தில் 5 விக்கெட்களை வீழ்த்தி கெளரவ பலகையில் அவருடைய பெயரை பொறிக்க வைக்க பும்ரா ஆர்வமாக இருப்பார்.மறுபுறம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, பந்து வீச்சாளர்கள் சோர்வாக இருப்பார்கள். எனவே அவர்கள் புதிய பந்து வீச்சாளர்களை எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி சேர்த்தாலும் கூட இங்கிலாந்துக்கு பிரச்சனையாக மாறலாம். ஏனென்றால், சர்வதேச டெஸ்ட்டில் ஆர்ச்சர் விளையாடி 4 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல், கஸ் அட்கின்சன்னும் சமீபமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாசர் உசேன் கூறினார்.
மேலும் படிங்க: தினேஷ் கார்த்திக்கின் சோக கதை.. கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன் ரவி சாஸ்திரி சொன்ன பகீர்!
மேலும் படிங்க: தந்தையால் கிரிக்கெட்டுக்கு வந்த 7 டாப் வீரர்கள்.. யாரெல்லாம் தெரியுமா?