PMAY : வீடு கட்ட முடியாமல் இருக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காகவே மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒரு சூப்பரான திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமாகும். 2015-ல் தொடங்கப்பட்ட PMAY திட்டம், முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கும், மலிவு விலையில் வீடுகள் கட்டுவதற்கும் உதவுகிறது. இந்த திட்டத்தின் மூலம், பொருளாதார ரீதியாக நலிவடைந்திருக்கும் குடும்பங்களுக்கு வீட்டுக் கடனில் 6.5% வரை வட்டி சலுகை 20 வருடங்களுக்கு கொடுக்கப்படுகிறது.
PMAY 2025-க்கு யார் விண்ணப்பிக்கலாம்?
PMAY திட்டத்தில் விண்ணப்பிக்க, உங்கள் குடும்ப வருமானம் கீழ்கண்ட 4 வகைகளில் எதில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) – குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் அல்லது குறைவு.
குறைந்த வருமானக் குழு (LIG) – குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை.
நடுத்தர வருமானக் குழு I (MIG I) – குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை.
நடுத்தர வருமானக் குழு II (MIG II) – குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை.
PMAY ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை (Step-by-Step Guide)
– PMAY அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும் – https://pmaymis.gov.in/
– “Citizen Assessment” (குடிமகன் மதிப்பீடு) என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் Applicant Category (விண்ணப்பதாரர் வகை) தேர்ந்தெடுக்கவும்.
– ஆதார் எண்ணை உள்ளிடவும் மற்றும் அடுத்த பக்கத்திற்குச் செல்லவும்.
– PMAY விண்ணப்ப படிவத்தை நிரப்பவும் –தனிப்பட்ட விவரங்கள், வருமானத் தகவல், வங்கி கணக்கு விவரங்கள், தற்போதைய முகவரி ஆகியவற்றை உள்ளிடவும்
– காப்சா கோட் (CAPTCHA) உள்ளிட்டு, விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கவும் (Submit).
PMAY Application Status-ஐ எப்படி Track செய்வது?
– “Track Your Assessment Status” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
– உங்கள் Application Reference Number (ARN) மூலம் நிலையைப் பார்க்கலாம்.
தேவையான ஆவணங்கள் (Documents Required)
அடையாளச் சான்றுக்கு ஆதார், பான் கார்டு, வருமானச் சான்றுக்கு சம்பள ஸ்லிப், ITR கொடுக்கலாம். வங்கி கணக்கு விவரங்கள், சொத்து ஆவணங்கள் (Property Documents) கொடுக்க வேண்டும்.