2 Key Changes in India: இங்கிங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி நாளை (ஜூலை 10) தொடங்க உள்ளது. இப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இதனால் நாளை தொடங்க இருக்கும் 3வது டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தை பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்க இங்கிலாந்து அணி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. இதனால் லார்ட்ஸ் மைதானம் பவுலிங் பிட்சாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இரு அணிகளுமே அதற்கு ஏற்றவாறு திட்டங்களை செய்யும்.
பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் மைதானத்தில் பந்து வீச்சாளர்கள் எளிதாக விக்கெட்டை எடுக்க முடியும் என்பதால், பேட்டிங்கைதான் பலப்படுத்த வேண்டும். பேட்டிங் வரிசை வலுவாக இருந்ததால்தான் நல்ல ரன்களை பெற முடியும். இதனால், இந்திய அணியின் தலைமை பயிர்சியாளர் கவுதம் கம்பீர் பேட்டிங்கை வலுப்படுத்த திட்டம்தீட்டி இருக்கிறார்.
இந்த 2 மாற்றங்கள் உறுதியாக இருக்கும்
மைதானத்தில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சுழற்பந்து வீச்சு அந்த அளவிற்கு தேவைப்படாது. அதனால், வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக சாய் சுதர்சனை சேர்பார்கள். அப்படி சேர்க்கும்பட்சத்தில் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் களம் இறங்கியது போல், 3வது இடத்தில் விளையாடுவார். மற்றொரு மாற்றமாக பும்ரா அணிக்குள் வருவார். அவர் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக வருவார். இந்த இரண்டு மாற்றம் நிச்சயமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
சிராஜிக்கு ஓய்வளிக்கலாம்
பும்ராவுக்கு அடுத்தபடியாக முக்கிய பந்து வீச்சாளர்களாக இருக்கும் முகமது சிராஜ், கடந்த இரண்டு போட்டிகளிலுமே விளையாடி உள்ளார். இதனால் அவருக்கு உடல் அளவில் ஓய்வு தேவைப்படலாம். ஒருவேளை சிராஜிக்கு ஓய்வு தேவைப்பட்டால், அவருக்கு பதிலாக அர்ஷதீப் சிங் அணிக்குள் வரலாம். இது நடந்தால், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கிடைப்பார்.
இந்தியாவின் உத்தேச பிளேயிங் 11: யஸ்ஷவி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில், ரிஷப் பண்ட், கருண் நாயர், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
மேலும் படிங்க: இந்திய அணியின் ‘நம்பர் 3’ சிக்கல்… இந்த வீரரை களமிறக்கினால் பிரச்னையே இருக்காது!
மேலும் படிங்க: Ind vs Eng 3rd Test: இந்த இரண்டு வீரர்கள் நீக்கம்.. உத்தேச பிளேயிங் 11 இங்கே!