சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார்: நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை புகாரின் அடிப்​படை​யில் நடிகை அருணா வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். தமிழ் சினி​மா​வில் 1980-களில் முன்​னணி நடிகை​யாக வலம் வந்​தவர் அருணா. இயக்​குநர் பார​தி​ராஜா இயக்கிய கள்​ளுக்​குள் ஈரம் படத்​தின் மூலம் இவர் தமிழ் சினி​மா​வில் அறி​முக​மா​னார். தொடர்ந்து மகரந்​தம், சிவப்பு மல்​லி, நீதி பிழைத்​தது, நாடோடி ராஜா, டார்​லிங் டார்​லிங் டார்​லிங் உட்பட தமிழ், தெலுங்கு உள்​ளிட்ட பல்​வேறு மொழி திரைப்​படங்​களில் நடத்துள்​ளார்.

ஆந்​தி​ராவைச் சேர்ந்த இவர், தொழில​திப​ரான மோகன் குப்தா என்​பவரை திரு​மணம் செய்து கொண்​டு, குடும்​பத்​துடன் சென்னை நீலாங்​கரை கபாலீஸ்​வரர் நகரில் வசித்து வரு​கிறார். வீடு, பங்​களா​வில் உட்​கட்​டமைப்பு அலங்​கார பணி​களை மேற்​கொள்​ளும் நிறு​வனத்தை மோகன் குப்தா நடத்தி வரு​கிறார்.

இந்​நிலை​யில், மோகன் குப்​தா​வின் நீலாங்​கரை​யில் உள்ள வீட்​டில் நேற்று காலை 5 பேர் கொண்ட அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் காலை 7 மணி முதல் சோதனை நடத்​தினர். மோகன் குப்தா நடத்தி வரும் நிறு​வனத்​தில் சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடை​பெற்​ற​தாக கிடைத்த புகாரின் அடிப்​படை​யில் இந்த சோதனை​யில் ஈடு​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

ஆனாலும், எந்த அடிப்​படை​யில் சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை நடை​பெற்​றது, இந்த சோதனைக்கு அது மட்​டும்​தான் காரண​மா, சோதனை​யில் முக்​கிய ஆவணங்​கள் ஏதேனும் சிக்​கி​யிருக்​கிறதா என்ற எந்த விவர​மும் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் வெளியிடவில்​லை. சோதனை முடிவடைந்த பிறகே சோதனை தொடர்​பான முழு விவர​ம் தெரிய​வரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.