இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.32 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.72 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,69.80 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக மதியம் 1.45 மணியவில் ரிக்டர் 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.