பிரேசில் தலைநகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரேசிலியா: பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதி​களில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற்​றது. இந்த மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார்.

ரியோ டி ஜெனிரோ​வில் இருந்து அவர் நேற்று முன்​தினம் இரவு பிரேசில் தலைநகர் பிரேசிலி​யா​வுக்கு சென்​றார். அங்கு விமான நிலை​யத்​தில் பிரேசில் பெண் கலைஞர்​கள் ட்ரம்ஸ் இசைத்து பிரதமர் மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். மேலும் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தி வரவேற்​றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பிரேசிலி​யா​வில் இந்​திய சமூகத்​தினரின் வரவேற்பு மறக்க முடி​யாத அனுபவம். எங்கு வாழ்ந்​தா​லும் இந்​திய கலாச்​சா​ரத்​தோடு அவர்​கள் ஒன்​றிணைந்து உள்​ளனர். பிரேசிலியா விமான நிலை​யத்​தில் படாலோ முண்டோ குழு​வினரின் ஆப்​பிரிக்க- பிரேசில் இசை மிக​வும் அற்​புத​மாக இருந்​தது. குறிப்​பாக சம்பா நடனம் சார்ந்த இசை சிறப்​பாக இருந்​தது” என்று தெரி​வித்​துள்​ளார்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்​வாவை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது வர்த்தகம், பாது​காப்​பு, எரிசக்​தி, விண்​வெளி, தொழில்​நுட்​பம், வேளாண்​மை, சுகா​தா​ரம் தொடர்​பாக பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. பிரதமர் நரேந்​திர மோடி இன்று பிரேசிலில் இருந்து நமீபி​யா​வுக்கு செல்​கிறார். அப்​போது அந்த நாட்​டுடன் பல்​வேறு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும் என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.