ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல்லின் 18வது தொடரில் கோப்பையை வென்றது. இதன் மூலம் அவர்களது கோப்பை வரட்சி நிறைவு பெற்றது. ஆனால், கோப்பையை வென்றதை அடுத்து அடுத்தடுத்து அதிர்ச்சி வெளியானது. ஒன்று 11 ரசிகர்கள் உயிரிழந்தது. மற்றொன்று ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை புகார். தற்போது யாஷ் தயாள் மீதான பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
யாஷ் தயாள் மீது உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இச்சூழலில் அவர் மீது FIR-யும் பதியப்பட்டது. அதாவது, யாஷ் தயாள் அந்த பெண்ணை திருமணம் செய்வதுகொள்ளவதாக கூறியும் அவரது குடும்பத்தினருடன் அறிமுகப்படுத்தியும், இதையடுத்து உடலுறவு வைத்துக்கொண்டதாகவும் பின்னர் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறியதாகவும் அந்த பெண் புகார் அளித்திருந்தார். விசாரணைக்கு பின்னர் யாஷ் தயாள் மீது பிரயாக்ராஜ் காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் குறித்து மெளனம் கலைத்துள்ளார் ஆர்சிபி வீரர் யாஷ் தயாள்.
அவர் அந்த பெண் மீது FIR பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அவர் அந்த பெண் தனது ஐபோன் மற்றும் மடிக்கணினியை திருடிவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். அந்த உத்தரபிரதேச பெண்ணுடன் 4 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதன்பின்னர் இருவரும் பழக் தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த பெண் தனது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான பணம் தேவைப்படுகிறது என கூறி லட்சக்கணக்கில் பெற்றதாகவும் ஆனால் இதுவரை அந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். யாஷ் தயாள் கொடுத்த புகாரில், அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு பேர் மீது FIR பதிவு செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
முன்னதாக அந்த பெண் ஜூன் 21ஆம் தேதி உத்திரப்பிரதேச முதலவர் யோகி ஆதித்யநாத்திடம் ஒருங்கிணைந்த குறைத்தீர்க்கும் அமைப்பு மூலம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து ஜூலை 6ஆம் தேதி இந்திராபுரம் காவல் நிலையர்ஹ்தில் பிஎன்எஸ் பிரிவு 69 திருமணம் குறித்த தவறான வாக்குறிதி உட்பட பாலியல் உறவு என்ற பிரிவின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: அசத்திய அஸ்வின் தாஸ்.. ஒயிட் டவுன் அணி திரில் வெற்றி!
மேலும் படிங்க: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: எந்த சேனலில் நேரலையாக பார்க்கலாம்?