சென்னை: அதிமுக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசின் ஊழல் பட்டியல் மிக நீளம் என்று கூறியதுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டார். தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தலைவரான அமித்ஷா கூறி வருகிறார். அதை சில பாஜக […]
