கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டம் கட்லுர் கிராமத்தில் கிருஷ்ணா நதியின் மீது நின்று செல்பி எடுத்தபோது மனைவி தன்னை ஆற்றில் தள்ளிவிட்டதாக கணவன் புகார் அளித்துள்ளார். யாதகிரி மாவட்டத்தின் வடகேரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தத்தப்பா என்பவரும் காடெம்மா என்பவரும் கடந்த ஏப்ரல் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன இந்த புதுமணத் தம்பதி இன்று காலை கட்லுர் கிராமத்தில் கிருஷ்ணா நதி மீதான பாலத்தை கடந்து சென்றுள்ளனர். […]
