தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் உயிருடன் இருப்பவரை இறந்ததாகக் கருதி இறந்துபோன ஒருவரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் கொடுத்தனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 9 ஆம் தேதி, வாரங்கல்-கம்மம் நெடுஞ்சாலையில் விபத்தில் அடிபட்டு குமார சுவாமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதே நாளில், ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் கிடந்த ஒருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதில் ரயிலில் அடிப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமையன்று இறந்த நிலையில் கட்டுமானத் […]
