ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பு ஆர்சிபி கழட்டிவிடும் 3 வீரர்கள்! யார் யார் தெரியுமா?

இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இருப்பினும் 2026 மினி ஏலத்திற்கு முன்பு தங்கள் அணியில் உள்ள சில வீரர்கள் கழட்டிவிட திட்டம் வைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாம் உள்ளிட்ட சில வீரர்கள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. 2025 சீசனில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், சில வீரர்களின் சமீபத்திய பார்ம் மற்றும் குறிப்பிட்ட வீரருக்கான ஏலத்தொகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆர்சிபி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டும் கோப்பையை வெல்ல இந்த மாற்றங்களை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் படிங்க: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆர்சிபி கழட்டிவிடும் வீரர்கள்

லியாம் லிவிங்ஸ்டன்

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான லியாம் லிவிங்ஸ்டனை 2025 மெகா ஏலத்தில் ரூ.8.75 கோடிக்கு ஆர்சிபி வாங்கியது. இருப்பினும் 10 போட்டிகளில் 112 ரன்கள் மட்டுமே அடித்தார். 16 என்ற சராசரியுடனும், 133 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் மோசமாக ஆடி இருந்தார். பந்துவீச்சில் 4 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிகபட்சமாக 54 ரன்கள் அடித்து இருந்தார். இவரது மோசமான ஆட்டம் மற்றும் அதிக ஏலத் தொகை காரணமாக ஆர்சிபி இவரை கழட்டிவிட அதிக வாய்ப்பு உள்ளது. 

ரசிக் சலாம்

இளம் வேகப்பந்து வீச்சாளர் ரசிக் சலாமை இந்த ஆண்டு மெகா ஏலத்தில் ரூ.6 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி அணி. இருப்பினும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி 1 விக்கெட் எடுத்துள்ளார். ஆர்சிபி அணியில் ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் இருப்பதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இவரை விடுவிப்பதன் மூலம் மற்றொரு இளம் பந்து வீச்சாளரை குறைந்த விலையில் வாங்க முடியும்.

லுங்கி என்ஜிடி 

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்ஜிடி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த ஆண்டு 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்நிலையில் இவரை விடுவித்து லாக்கி ஃபெர்குசன்,  லான்ஸ் மோரிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

மயங்க் அகர்வால்

தேவ்தத் படிக்கலிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்காலிகமாக அணியில் இணைந்த மயங்க் அகர்வால் 4 போட்டிகளில் விளையாடி 148 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 95 ரன்கள் அடித்துள்ளார். அடுத்த சீசனில் படிக்கல் அணிக்கு திரும்பினால் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. எனவே மயங்க் அகர்வால் மினி ஏலத்தில் இடம் பெறுவார்.

ஐபிஎல் 2026ல் ஆர்சிபி

இந்த ஆண்டு ராஜத் பட்டிதார் தலைமையில் தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அடுத்த சீசனில் விராட் கோலி, ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் மற்றும் யாஷ் தயாள் ஆகியோரை தக்கவைக்க விரும்புகிறது. அதே சமயம் லிவிங்ஸ்டன், ரசிக் சலாம் போன்ற வீரர்களை விடுவித்து, புதிய ஆல்-ரவுண்டர்களையும், இளம் வேகப்பந்து வீச்சாளர்களையும் வாங்க திட்டமிடுகிறது. சென்னை அணி டார்கெட் செய்யும் கேமரூன் கிரீன், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மேத்யூ ஹென்ரி ஆகியோரை ஆர்சிபி அணியும் டார்கெட் செய்ய உள்ளது.

மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் கழட்டி விடும் 3 வீரர்கள்! யார் யார் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.