தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி: புதுச்சேரியில் பழனிசாமி உறுதி

கடலூர் / புதுச்சேரி: தமிழகத்​தில் தனிப்​பெரும்​பான்​மை​யுடன் அதி​முக வெற்றி பெற்​று, ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்​தின் ஒரு பகு​தி​யாக நேற்று மாலை கடலூருக்கு வந்த பழனி​சாமிக்​கு, ரெட்​டிச்​சாவடி​யில் கடலூர் வடக்கு மாவட்​டச்செய​லா​ளர் எம்​.சி.சம்​பத்தலை​மை​யில் வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பின்​னர், பொது​மக்​களிடையே பழனி​சாமி பேசி​ய​தாவது: கடலூர் மாவட்​டத்​தில் தானே புயலின்​போது நாங்​கள் ஓடிவந்து நிவாரண உதவி​களை செய்​தோம். கடந்த ஆட்​சி​யில் விவ​சா​யிகளுக்கு வழங்​கப்​பட்ட விலை​இல்லா கறவை மாடு, ஆடு, கோழிகளை திமுக அரசு நிறுத்​தி​விட்​டது. மீண்​டும் அதி​முக ஆட்​சிக்கு வரும்​போது, இவை வழங்​கப்​படும். ஏழை பெண்​களுக்​கான தாலிக்கு தங்​கம் திட்​ட​மும் மீண்டும் செயல்​படுத்​தப்​படும்.

ஸ்டா​லின் கடன் வாங்​கு​வ​தில்​தான் சூப்​பர் முதல்​வ​ராக உள்​ளார். வரி, கட்​ட​ணங்​களை உயர்த்தி மக்​களைப் பரிதவிக்​கச் செய்​துள்​ளனர். குப்​பைக்கு வரி போட்​டது திமுக அரசு​தான். சொன்​னதைச் செய்​யாமல், மக்​களை ஏமாற்றி வாக்கு பெறு​வ​தில் விஞ்​ஞான மூளைக்​காரர்​கள் திமுக​வினர்.

திமுக ஆட்​சி​யில் பல்​வேறு திட்​டங்​களை கொண்டு வந்​துள்​ள​தாக கூறுகின்​றனர். ஒரு திட்​டத்தை ஸ்டா​லின் அறி​விப்​பார். அதற்கு குழு போடு​வார். இது​வரை 52 திட்​டங்​களை அறி​வித்​து, 52 குழுக்​கள் போட்​டுள்​ளனர். உதயநிதி ஸ்டா​லினின் படத் தயாரிப்பு நிறு​வனம், படங்​களை அடி​மாட்டு விலைக்கு வாங்​கி, பல கோடி லாபத்​துக்கு விற்​பனை செய்​கிறது.

டாஸ்​மாக் மூலம் ஆண்​டுக்கு ரூ.5,400 கோடி மேலிடத்​துக்கு செல்​கிறது. இதில் பெரிய ஊழல் நடக்​கிறது. அமலாக்​கத் துறை ரூ.1,000 கோடிக்கு ஊழலைக் கண்​டு​பிடித்​து, வழக்கு பதிவு செய்​துள்​ளது. திமுக​வினர் ஆட்​டம் 8 மாதங்​கள்​தான் நீடிக்​கும். தேர்​தல் வரு​வ​தால்​தான் ‘உங்​களு​டன் இருக்​கிறேன்’ என ஸ்டா​லின் நினை​வுபடுத்​துகிறார். நாலரை ஆண்​டு​களாக அக்​கறை​இல்​லாமல், தற்​போது வீடு வீடாகச் சென்று உறுப்​பினர்​களை சேர்க்​கிறார்​கள். சேர​வில்லை என்​றால் மகளிர் உரிமைத்​தொகை உள்​ளிட்ட சலுகைகளை நிறுத்தி விடு​வேன் என்று கூறி, மிரட்​டு​கின்​றனர்.

இவ்​வாறு பழனி​சாமி கூறி​னார். தொடர்ந்​து, நெல்​லிக்​குப்​பம், பட்​டாம்​பாக்​கம், அண்ணா கிராமம், பண்​ருட்​டி, நெய்​வேலியில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். முன்​ன​தாக, புதுச்​சேரி பூர்​ணாங்​குப்​பத்​தில் பழனி​சாமி செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​த​போது ‘தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமை​யும்’ என்று அமித்ஷா கூறி​யுள்​ளது குறித்து கேள்வி எழுப்​பினர். அதற்​கு, “தமிழகத்​தில் பெரும்​பான்​மை​யுடன் அதி​முக வெற்றி பெற்​று, ஆட்சி அமைக்​கும்’’ என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.