Chennai Super Kings: ஐபிஎல் 2025 சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் மோசமான சீசனாக அமைந்தது. புள்ளி பட்டியலில் முதல் முறையாக பத்தாவது இடத்தில் இடம் பெற்றனர். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கு பலம் வாய்ந்த அணியாக வரவேண்டும் என்று பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு கேப்டன் ருதுராஜ் கைகுவாட்டிற்கு கையில் அடிபட்டதன் காரணமாக தோனி மீண்டும் கேப்டன்சி பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் தொடர் தோல்விகளால் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு சூழ்நிலையில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்தது. அடுத்தாண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது.
மேலும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 10 இந்திய பந்து வீச்சாளர்களின் பட்டியல்!
மாற்று அணியில் இருந்து வீரர்கள்?
மற்ற அணிகளிலிருந்து சில வீரர்களை ட்ரேடு மூலம் வாங்கும் திட்டத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் 2025 சீசனில் ஒரு சில வீரர்கள் நன்றாக விளையாடியிருந்தாலும் ஒரு சிலர் மோசமான பர்பாமன்ஸை கொடுத்திருந்தனர், அதுவும் அணியின் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டு மினி ஏலம் நடைபெறுவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைக்கும் வீரர்களை பற்றி பார்ப்போம்.
சென்னை தக்க வைக்கும் வீரர்கள்!
எம்எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மதீஷ பத்திரன, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, நூர் அகமது, டெவால்ட் ப்ரீவிஸ், ஆயுஷ் மத்ரே, ஊர்வில் படேல், அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, நாதன் எல்லிஸ், வன்ஷ் பேடி, விஜய் சங்கர், ராமகிருஷ்ண கோஷ்
புதிய பரிமாணத்தில் சிஎஸ்கே
ஐபிஎல் வரலாற்றில் அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான், அது தான் அவர்களின் வெற்றிக்கும் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் தற்போது கிரிக்கெட் மொத்தமாக மாறி உள்ள காலத்தில் அனுபவத்தை விட இளமைக்கு தான் அதிக பவர் உள்ளது. அதனை உணர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர்களை தங்கள் அணிக்குள் கொண்டு வர அதிக முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தான் ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், உருவில் பட்டேல், வன்சி பேடி, நூர் அகமது ஆகியோரை தங்கள் அணியில் எடுத்துள்ளனர். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்த வீரர்களை வைத்து ஒரு பலம் வாய்ந்த அணியை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இறங்கியுள்ளது.
அதே சமயம் சில சீனியர் வீரர்களையும் கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டம் வைத்துள்ளது. அதில் அஸ்வின், தீபக் ஹூடா, சாம்கரன், ஜேமி ஓவர்டன், கான்வே ஆகியோரை கழட்டிவிட அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை அணி சில வீரர்களை டார்கெட் செய்துள்ளது. அவர்களின் சில கேமரூன் கிரீன், டோனோவன் ஃபெரீரா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேமரூன் கிரீன் உலகில் உள்ள மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர். மிடில் ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இவர் அதிகம் உதவுவார். அதே சமயம் டோனோவன் ஃபெரீரா சமீபத்திய டி20 லீக் தொடர்களில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும் படிங்க: IND vs ENG: இங்கிலாந்து அணி ஏமாற்றியதா? கடுப்பான இந்திய வீரர்கள்! என்ன நடந்தது?