லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் சதமும் (104 ரன்), ஜேமி சுமித் (51 ரன்), பிரைடன் கார்ஸ் (56 ரன்) அரைசதமும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 100 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், சோயிப் பஷீர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடிப்பது கவுரமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக இந்த போட்டியில் சதமடித்து அசத்திய கே.எல்.ராகுல் தான் அணிந்திருந்த ஜெர்சியில் கையெழுத்திட்டு லார்ட்சில் உள்ள அருங்காட்சியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.