இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஜூலை 10ஆம் தேதி 3வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 14) வரை நடைபெறும்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 10ஆம் தேதி தொடங்கி இப்போட்டி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அடித்த அதே 387 ரன்களை இந்திய அணியும் அடித்துள்ளது. இச்சூழலில் நேற்றைய நாள் (ஜூலை 12) முடிவடையும் போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வந்தது. அந்த அணி 2 ரன்கள் அடித்துள்ளது.
இன்று மதியம் 3.30 மணிக்கு நான்காம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது. இதில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடர உள்ளது. இங்கிலாந்து அணியை பெரிய ரன்கள் அடிக்கவிடாமல், கட்டுப்படுத்தும் பட்சத்தில் இப்போட்டியை இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை இங்கிலாந்து அணி நாளை முதல் ஷேஷன் வரை பேட்டிங் செய்தால், இந்திய அணி டிரா செய்ய முயற்சிக்கும்.இந்த நிலையில், நேற்றைய நாள் முடிவில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலிக்கும் இந்திய கேப்டன் சுப்மக் கில்லுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் களத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
என்ன நடந்தது?
மூன்றாம் நாள் முடிவுக்கு சற்று நேரம் முன்பே இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு இரண்டு ஓவர்கள் வீசி நெருக்கடி கொடுக்க வேண்டும் என இந்தியா அணி திட்டமிட்டது. ஆனால் இங்கிலாந்து அணி வீரர்கள் வேண்டுமென்றே களத்திற்கு தாமதமாக வந்தனர். இதனால், இந்திய அணி வீரர்கள் கோபமடைந்தனர். இருப்பினும் இரண்டு ஓவர்களை வீசி விட வேண்டுமென்று, பும்ரா ஓடும் தூரத்தை குறைத்து கொண்டு பந்து வீசினார். அப்போது, பேட்டிங் செய்த ஜாக் கிராலி பும்ராவை நிறுத்தினார். சைட் ஸ்கிரீனில் யாரோ செல்கிறார்கள் என கூறினார்.
இதையடுத்து மீண்டும் ஜாக் கிராலி அதையே செய்ய, இந்திய அணியின் வீரர்கள் கோபமடைந்தனர். கேப்டன் சுப்மன் கில், ஜாக் கிராலியை கடுமையாக சாடினார். அவருடன் சேர்ந்து ராகுல் உள்ளிட்ட இந்திய வீரர்களும் கண்டித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் பும்ரா பந்து வீசும்போது, கையில் வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவ உதவியை ஜாலி கிராலி அனுகினார். ஜாக் கிராலி நேரத்தை வீணடிக்க மீண்டும் மீண்டும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டதால், இந்திய வீரர்கள் கோபமடைந்து அவருடன் வாக்குவாத்ததிற்கு சென்றனர். இதனால் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நடுவர்கள் சென்று இரு அணி வீரர்களையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். மேலும், ஓவரை முடிக்கவும் அறிவுறுத்தினர். மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி இரண்டு ரன்கள் எடுத்தது.
மேலும் படிங்க: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் கழட்டி விடும் 3 வீரர்கள்! யார் யார் தெரியுமா?