Ind vs Eng 3rd Test: இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டி தற்போது விளையாடி வருகிறது. நேற்று மூன்றாம் போட்டி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 13) நான்காம் நாள் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணி இங்கிலாந்து அடித்த 387 ரன்களை சமன் செய்துள்ளது. தற்போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், நேற்று(ஜூலை 12) மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பு ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனார். இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது. கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் 141 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் இருந்தனர். ரிஷப் பண்ட் 74 ரன்களிலும், கே.எல். ராகுல் 98 ரன்களிலும் இருந்தனர். இச்சூழலில், மத்திய இடைவேளைக்கு சற்று முன்பு ஷோயிப் பஷீர் வீசினார். அப்போது, ரிஷப் பண்ட் ஸ்ட்ரைக்கில் இருந்தார். எதிர்முணையில் ராகுல் 98 ரன்களில் இருந்தார். பஷீர் வீசிய பந்தை பண்ட் தடுத்து ஆடினார். அப்போது இருவரும் ரிஷிக் எடுத்து சிங்கிள் எடுக்க முயன்றனர். இதில் ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனார்.
தவறை ஒப்புக்கொண்ட ராகுல்
இதனால் ரிஷப் பண்ட் 74 ரன்கள் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, கே.எல்.ராகுல் சதம் விளாசி ஆட்டமிழந்தார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஆட்டமிழந்ததற்கு நான் கூறிய வார்த்தைதான் காரணம் என கூறி உள்ளார். மூன்றாம் நாள் முடிவுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு. மதிய உணவு இடைவேளைக்கு முன் நான் சதம் அடிக்க நினைத்தேன். அதை ரிஷப் பண்ட்டிடம் கூறினேன். உணவு இடைவேளைக்கு முன்பான கடைசி ஓவரை பஷீர் வீசினார். அதை நான் நல்ல வாய்ப்பாக நினைத்தேன்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பந்து நேராக ஃபீல்டரிடம் சென்றுவிட்டது. அந்த ரன் அவுட் போட்டியின் வேகத்தையே மாற்றிவிட்டது. அது எங்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. நாங்கள் இருவரும் நல்ல நிலையில் இருந்தோம். ஒருவராவது பெரிய ஸ்கோரை அடித்திருக்க வேண்டும் என கே.எல். ராகுல் தெரிவித்தார். இவரது ஆட்டமிழமிப்பிற்கு பின்னர் ரவீந்திர ஜடேஜா அடித்த 72 ரன்கள் இங்கிலாந்து அணி அடித்த 387 ரன்களை சமன் செய்ய உதவியது.
இன்று நான்காம் நாள் போட்டி
இங்கிலாந்து அணி 2 ரன்கள் முன்னிலையுடன் நேற்றைய போட்டியை நிறைவு செய்தது. இதையடுத்து இன்று (ஜூலை 13) மதியம் .3.30 மணிக்கு தொடங்க இருக்கும் நான்காம் நாள் போட்டியில் தொடர்ந்து பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய நாள் போட்டிக்குள் இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்த இந்திய அணி முயற்சிக்கும். அப்படி இன்றே அனைத்து விக்கெட்டை வீழ்த்தும்பட்சத்தில், இந்திய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கும் இலக்கை எளிதில் அடித்து வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
மேலும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 10 இந்திய பந்து வீச்சாளர்களின் பட்டியல்!
மேலும் படிங்க: IND vs ENG: இங்கிலாந்து அணி ஏமாற்றியதா? கடுப்பான இந்திய வீரர்கள்! என்ன நடந்தது?