England vs India 3rd Test: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 387 ரன்கள் அடிக்க, இந்திய அணியும் 387 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் ஸ்கோர் சரிசமமான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் இந்திய அணியின் பவுலர்கள் வாஷிங்டன் சுந்தர், சிராஜ், பும்ரா சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மேலும் படிங்க: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
போட்டியை மாற்றிய வாஷிங்டன் சுந்தர்!
நான்காவது நாளில் ஆரம்பத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் ஸ்டோக்ஸ் மற்றும் ரூட் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். இங்கிலாந்து அணியின் பக்கம் சாய்ந்த போட்டியை தனது சிறப்பான பவுலிங் மூலம் தன் பக்கம் திருப்பினார் வாஷிங்டன் சுந்தர். இதன் மூலம் மூன்றாவது டெஸ்ட் போட்டியை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நான்கு முக்கியமான விக்கெட்டுகளை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தியது தான் வெற்றிக்கு காரணமாக இருக்கும். முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஜோ ரூட் 2வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அவரது விக்கெட்டை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஜேமி ஸ்மித், இங்கிலாந்து கேப்டன் பென ஸ்டோக்ஸ் மற்றும் சோயப் பஷீர் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்.
– Sundar cleans up Root.
– Sundar cleans up Stokes.
– Sundar cleans up Jamie.
– Sundar cleans up Bashir.
CRAZY PERFORMANCE BY WASHINGTON SUNDAR pic.twitter.com/kGQTanZBAM
— Johns. (@CricCrazyJohns) July 13, 2025
வரலாறு படித்த வாஷிங்டன் சுந்தர்
இந்த போட்டியில் நான்கு விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசிய இந்திய ஸ்பின்னர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் வாஷிங்டன் சுந்தர். இந்திய அணி இதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் 20 போட்டிகள் விளையாடி உள்ளது. அதில் வாசிங்டன் சுந்தர் எடுத்த 22 ரன்களுக்கு 4 விக்கெட் என்பது தான் சிறந்த பந்துவீச்சாக உள்ளது. இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்திய 5-வது இந்திய ஸ்பின்னர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வாஷிங்டன் சுந்தர். இதற்கு முன்னர் 1971 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் என்ற இந்திய வீரர் இந்த சாதனையை படைத்திருந்தார். இது நடந்து கிட்டத்தட்ட 51 ஆண்டுகள் ஆகிறது.
இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சாளராக கருதப்படும் அனில் கும்ப்ளே கூட இரண்டு முறை மூன்று விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். மறுபுறம் ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவர்களை தவிர வேறு எந்த ஒரு இந்திய ஸ்பின்னரும் சமீபத்திய ஆண்டுகளில் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு விக்கெட்டிற்கு மேல் எடுத்ததே இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின் கூட இந்த சாதனையை புரியவில்லை. இரண்டாவது இன்னிங்சில் 192 அடித்துள்ள இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக வைத்துள்ளது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. இதனால் இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் கழட்டி விடும் 3 வீரர்கள்! யார் யார் தெரியுமா?