புதுடெல்லி,
கோவா, அரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு கவர்னர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதன்படி, கோவா மாநில கவர்னராக பசுபதி அசோக் கஜபதி ராஜு நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மூத்த அரசியல்வாதி ஆவார். விமான போக்குவரத்து துறையின் முன்னாள் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர்.
இதேபோன்று, அரியானா மாநில கவர்னராக ஆஷிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். பேராசிரியரான அவர் உயர் கல்வி துறையில் நிர்வாக துறையில் அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.
லடாக் யூனியன் பிரதேச கவர்னராக கவீந்தர் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார். ஜம்முவை சேர்ந்த மூத்த பா.ஜ.க. உறுப்பினரான அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சட்டசபைக்கான சபாநாயகராகவும் பதவி வகித்திருக்கிறார்.
லடாக் துணை நிலை கவர்னராக பதவி வகித்த ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலான, பி.டி. மிஷ்ரா ராஜினாமா செய்த நிலையில், அதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்று கொண்டார். இதனை ஜனாதிபதி மாளிகை உறுதி செய்து அறிவித்துள்ளது.