சென்னை இன்று முதல்வர் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகம் நடத்திவரும் தனிநபர் தொழில் முனைவோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வீட்டிற்கு சென்று அவரது உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பிறகு, கூட்டமைப்பின் தலைவர் எம்.ஏ.அன்பழகன் தலைமையில் தலைமைச் செயலகம் வந்த நிர்வாகிகள், முதல்வர் அலுவலகத்திலும், துணை முதல்வர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தனர். ஏற்கனவே, இன்று […]
