FASTag Account Transfer : இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் கட்டாயம் பாஸ்டேக் அக்கவுண்ட் வழியாகவே சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும். இந்த விதிமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. 2021 முதல் இந்தியாவில் இந்த விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு வாகனத்தின் பாஸ்டேக் அக்கவுண்டும் பயன்படுத்துபவரின் வாகனத்தின் ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் ப்ரீபெய்ட் வாலட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. வாகனம் டோல் ப்ளாசாவை கடக்கும்போது, கட்டணம் தானாகவே வாலட்டில் இருந்து கழிக்கப்படும்.
இந்த சூழலில் சில பயனர்கள் தங்கள் FASTag-ஐ ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்ற விரும்புகிறார்கள். அதனை எப்படி மாற்றலாம், அதற்கான நடைமுறைகள் என்ன என்பதை இங்கே விளக்கமாக பார்க்கலாம்.
ஆன்லைன் முறை
– நீங்கள் பாஸ்டேக் அக்கவுண்ட் மாற்ற விரும்பும் புதிய வங்கியின் வெப்சைட் அல்லது ஆப் -க்கு செல்லவும்
– FASTag பிரிவில் சென்று “Apply for FASTag” அல்லது “Buy FASTag” என்பதை கிளிக் செய்யவும்.
– உங்கள் வாகனத்தின் ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணை (VRN) உள்ளிடவும். கூடுதலாக, மொபைல் எண், மின்னஞ்சல் ID உள்ளிடவும்.
– டெலிவரி வீட்டு முகவரியை உறுதிசெய்து, பேமெண்ட் செய்யவும். புதிய FASTag 3-4 வேலை நாட்களில் டெலிவர் செய்யப்படும்.
தேவையான ஆவணங்கள்
– வாகன RC-ன் க்ளியர் படம்
– ஆதார் உள்ளிட்ட ID ப்ரூஃப், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அட்ரஸ் ப்ரூஃப்புக்கு கொடுக்கலாம்
– பாஸ்போர்ட் சைஸ்டு புகைப்படம்
புதிய FASTag கிடைத்த பிறகு என்ன செய்ய வேண்டும்?
– புதிய FASTag ஆக்டிவேட் ஆக 4 மணி நேரத்திற்குள் NPCI ரெக்கார்டுகளில் மேப் செய்யப்படும்.
– பழைய FASTag 15 நாட்களுக்குள் தானாக டீ-ஆக்டிவேட் ஆகிவிடும்.
– முந்தைய வங்கியுடன் உள்ள எந்தவொரு பாக்கி தொகை/ரீஃபண்ட்டையும் கிளியர் செய்யவும்.
மாற்றுவதற்கு முன் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியவை
– உங்கள் தற்போதைய FASTag-இல் பாலன்ஸ் இல்லை என்பதை உறுதி செய்யவும்.
– FASTag ஹாட்லிஸ்ட் செய்யப்பட்ட நிலையில் இல்லை என்பதை சரிபார்க்கவும்.
– அனைத்து டாக்யுமெண்ட்ஸும் சரியாக தயாராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
– இந்த ப்ரோசஸ் மூலம், நீங்கள் எளிதாக உங்கள் FASTag-ஐ புதிய வங்கிக்கு மாற்றலாம்