கருண் நாயருக்கு பதில் அணிக்குள் வரும் முக்கிய வீரர்! இங்கிலாந்து வெல்வது சிரமம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன்-தெண்டுல்கர் டிராபி தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் வரும் ஜூலை 23 முதல் 27 வரை நடைபெற உள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இந்த தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில், அணியில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய உள்ளனர். கருண் நாயர் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம், மேலும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிங்க: பஞ்சாப் கழட்டிவிடும் 4 வீரர்கள்! தட்டி தூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

கருண் நாயரின் ஏமாற்றம்

கருண் நாயர் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். சமீபத்திய ரஞ்சி டிராஃபியில் 863 ரன்கள் அடித்தும், ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியும் மீண்டும் அணியில் இடம் பிடித்தார்.  ஆனால், இங்கிலாந்து தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 131 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 40 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், “இந்தியா லார்ட்ஸில் தோற்றால், கருண் நாயரின் இடம் பறிபோகும்,” என்று முன்பே எச்சரித்தார். 4வது டெஸ்டில் அவர் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணிக்கு வாயூரம் குல்தீப் யாதவ்?

ஓல்டு டிராஃபோர்டு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் அணிக்கு பலம் சேர்ப்பார். வாஷிங்டன் சுந்தர் லார்ட்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக பந்துவீசி இருந்தார். அவருடன் இணைந்து குல்தீப் யாதவ் பந்துவீசினால் இங்கிலாந்து அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். மேலும், ஜஸ்பிரீத் பும்ரா 4வது டெஸ்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லார்ட்ஸில் காயம் காரணமாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. அவருக்கு அடுத்த 10 நாளில் காயம் துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக இடம்பெறலாம்.

இந்திய அணியின் சாத்தியமான பிளேயிங் XI

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த்/துருவ் ஜுரேல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அகாஷ் தீப், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ். 

இந்தியா vs இங்கிலாந்து  அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி, இந்த தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு முக்கியமான போட்டியாகும். கருண் நாயரின் நீக்கம் மற்றும் குல்தீப் யாதவின் சாத்தியமான வருகை, இந்திய அணியின் உத்தியை மாற்றலாம். ஷுப்மன் கில் தலைமையில், இந்திய அணி மான்செஸ்டரில் வெற்றி பெற அதிக முயற்சி செய்யும். 

மேலும் படிங்க: IND vs ENG: முக்கிய வீரர் தொடரில் இருந்து விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.