மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின் மாவட்டத்திற்கு ரூ.162 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.48.17 கோடி மதிப்பிலான 47 பணிகளை திறந்து வைத்து, ரூ.113.51 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ. 162 கோடி மதிப்பில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான எட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். […]
