4-வது டெஸ்ட்: ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா..? இந்திய துணை பயிற்சியாளர் பதில்

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.

தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த மிக முக்கியான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என்பதில் பெரிய கேள்வி நிலவுகிறது. ஏனெனில் இந்த தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் மற்றும் 3-வது போட்டிகளில் அவர் விளையாடி விட்டதால் மீதமுள்ள 2 போட்டிகளில் எந்த ஒன்றில் விளையாடுவார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வியில் நிலவுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என்று இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றிற்கு அவரை (பும்ரா) தேர்வு செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். தொடர் இப்போது நெருங்கி வருவது தெளிவாகத் தெரிகிறது. எனவே நாங்கள் மான்செஸ்டரில் (4-வது போட்டி) அந்த முடிவை (பும்ரா விளையாடுவது) எடுப்போம்” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.