இந்திய பொருளாதாரத்திற்கு “மிகப்பெரிய பூஸ்டர் டோஸ்” தேவைப்படுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “ஜிஎஸ்டி சீர்திருத்தம், வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவது, மற்றும் ஓரிரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சாதகமாக செயல்படுவதை கைவிடுவது” ஆகியவை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நுவாமா நிறுவனம் நேற்று வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து சில கவலைகளை அது அடிக்கோடிட்டுக் […]
