ரோம்,
ஆஸ்தியாவை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற பாராகிளைடிங் வீரர் பெலிக்ஸ் பாம்கார்ட்னர்(வயது 56). இவர் கடந்த 2012-ம் ஆண்டு ‘ரெட் புல் ஸ்ட்ராடோஸ்’ என்ற திட்டத்தின்கீழ், பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லையில் இருந்து பூமியை நோக்கி ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்தார்.
அப்போது அவர் ஒலியை விட சுமார் 1.25 மடங்கு அதிக வேகத்தில் பூமியை நோக்கி விழுந்தார். பின்னர் பாராசூட் மூலம் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் பத்திரமாக தரையிறங்கினார். இதன் மூலம் விமானம் இல்லாமல் ஒலியை விட அதிக வேகத்தில் பயணம் செய்தவர் என்ற சாதனையை பெலிக்ஸ் படைத்தார்.
இந்த நிலையில், பெலிக்ஸ் பாம்கார்ட்னர் பாராகிளைடிங் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இத்தாலியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியோ பகுதியில் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவரது பாராகிளைடர் கட்டுப்பாட்டை இழந்து ஒரு ஓட்டலின் நீச்சல் குளத்திற்கு அருகில் தரையில் விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.