பாட்னா,
பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக நலந்தா மற்றும் வைஷாலியில் தலா 6 பேர் உயிரிழந்த நிலையில், ஷேக்புராவில் 5 பேரும், பாட்னா மற்றும் அவுரங்காபாத்தில் தலா 3 பேரும், நவாடா மற்றும் பங்காவில் தலா 2 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர போஜ்பூர், பாகல்பூர், ரோடாஸ், கயாஜி, சமஸ்திபூர் மற்றும் ஜமுய் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். முன்னதாக மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.