கொல்கத்தா,
மேற்கு வங்காளம் கொல்கத்தாவை சேர்ந்த ரிதம் மண்டல்(வயது 21) என்ற மாணவர், கராக்பூர் ஐ.ஐ.டி. கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் ரிதம் மண்டல் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு உணவு சாப்பிட்ட பிறகு தனது அறைக்கு திரும்பிய ரிதம் மண்டல், அதிகாலை வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், விடுதி காவலர்கள் அறையின் கதவை உடைத்து திறந்தனர். அங்கு ரிதம் மண்டல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரிதம் மண்டலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவரின் அறையில் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளார்.