Ind vs Eng 4வது டெஸ்ட்: மான்செஸ்டரில் 35 ஆண்டுகால மோசமான சாதனை.. சுப்மன் கில் அணிக்கு இருக்கும் சவால்!

35 years india record in Manchester: அண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பைக்காக இங்கிலாந்து மற்றும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான், தொடரை வெல்ல முடியும் என்பதால், சும்பன் கில் தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

ஆனால், தொடரை வெல்ல இந்திய அணி மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கும் 4வது போட்டியை வென்றாக வேண்டும். ஆனால் இந்திய அணி முன்னால் மிகப்பெரிய சவால் காத்துக்கொண்டிருக்கிறது. அதாவது, மான்செஸ்டர் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய 9 போட்டிகளில் ஒரு போட்டியை கூட இந்திய அணி வெல்லவில்லை. 9 போட்டியில் 4 போட்டியை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.  இது இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்தையும் பேட்டிங் செய்வதற்கான கடினமான ஒரு களத்தையும் காட்டுகிறது. மான்செஸ்டர் மைதானத்தில் சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சிலர் இருந்தாலும், கடந்த 35 ஆண்டுகளாக ஒரு இந்திய வீரர் கூட சதம் அடிக்கவில்லை. 

மான்ச்செஸ்டரில் சதம் அடித்த இந்திய வீரர்கள்

Ind vs Eng: இந்திய அணியின் முன்னாள் வீரர் சையத் முஷ்டாக் அலிதான் மாஸ்செஸ்டரில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆவார். அவர் இந்த சாதனையை 1936ஆம் ஆண்டில் செய்தார். அதேபோல், இந்திய டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் அடிக்கப்பட்ட முதல் சதமும் இதுவே ஆகும். சையத் முஷ்டாக் அலி அப்போட்டியில் 112 ரன்களை அடித்திருந்தார். 

இவரை அடுத்து 7 வீரர்கள் இந்த மைதானத்தில் சதம் அடித்துள்ளனர். 1936ஆம் ஆண்டு விஜய் மெர்ச்சண்ட், 1959ஆம் ஆண்டில் அப்பாஸ் அலி பெய்க் மற்றும் பாலி உம்ரிகர், 1974ஆம் அண்டில் சுனில் கவாஸ்கர், 1982ஆம் ஆண்டு சந்தீப் பாட்டில், 1990ஆம் ஆண்டு முகமது அசாருதீன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மான்செஸ்டரில் சதம் விளாசிய வீரர்களாக உள்ளனர். 1990ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு இந்திய வீரர் கூட இந்த மான்செஸ்டர் மைதானத்தில் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சுப்மன் கில் தலையிலான இந்திய அணி சாதிக்குமா? 

இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் 1 போட்டியில் இந்திய அணி வென்றது. தோல்வி அடைந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி நெருக்கமாக சென்று தோற்றது. தற்போது, மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கும் 4வது டெஸ்ட் போட்டியும் இந்திய அணிக்கு சவாலகவே உள்ளது. ஒருவேளை இந்திய அணி 4வது டெஸ்ட் போட்டியில் வெல்லும் பட்சத்தில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சாதனை படைக்கும். ஆனால் அதை செய்துகாட்டுமே என்பதே இருக்கும் சவால். 

மேலும் படிங்க: பிசிசிஐயின் ஆண்டு வருமானம் எவ்வளவு? அதில் IPL-இன் பங்கு எவ்வளவு தெரியுமா?

மேலும் படிங்க: தோனி அணிந்த ‘PIANO KEYS’ சட்டை.. இவ்வளவு விலையா? அப்படி என்ன ஸ்பெஷலா இருக்கு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.