ரூ.3,200 கோடி மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்யா கைது

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் அரசு நடத்​தும் மதுக் கடைகளில் ரூ.3,200 கோடி அளவுக்கு ஊழல் நடை​பெற்று இருக்​கிறது. இந்த ஊழல் வழக்​கில் முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் நேற்று கைது செய்​யப்​பட்​டார்.

சத்​தீஸ்​கர் முழு​வதும் 750-க்​கும் மேற்​பட்ட மதுக்​கடைகளை மாநில அரசு நடத்தி வரு​கிறது. இதற்​காக தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​கின்​றன. முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் தலை​மையி​லான காங்​கிரஸ் ஆட்​சி​யின்​போது மது​பானங்​களை கொள்​முதல் செய்​த​தில் மிகப்​பெரிய அளவில் ஊழல் நடை​பெற்​ற​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

கடந்த 2023-ம் ஆண்டு டிசம்​பரில் சத்​தீஸ்​கரில் விஷ்ணு தியோ சாய் தலை​மையி​லான பாஜக அரசு ஆட்​சிப் பொறுப்​பேற்​றது. இதன்​பிறகு மது​பான ஊழல் குறித்த விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டது. மாநில பொருளா​தார குற்​றப்​பிரிவு வழக்கு பதிவு செய்து தீவிர விசா​ரணை நடத்​தி​யது.

இதே ஊழல் விவ​காரம் குறித்து அமலாக்​கத் துறை தனி​யாக வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதுதொடர்​பாக முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல், அவரது மகன் சைதன்யா பாகேல், மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் உள்​ளிட்​டோரிடம் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் பலமுறை விசா​ரணை நடத்தி உள்​ளனர்.

இதன் தொடர்ச்​சி​யாக சத்​தீஸ்​கரின் துர்க் மாவட்​டம், பிலாய் நகரில் உள்ள முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் கைது செய்​யப்​பட்​டார். இதன்​பிறகு ராய்ப்​பூர் நீதி​மன்​றத்​தில் அவர் ஆஜர்​படுத்​தப்​பட்​டார். அவரை 5 நாட்​கள் போலீஸ் காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது.

இதுகுறித்து அமலாக்​கத் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த 2019-ம் ஆண்​டில் சத்​தீஸ்​கரில் காங்​கிரஸ் ஆட்சி நடை​பெற்​றது. அப்​போது ஆட்​சி​யாளர்​களின் அறி​வுறுத்​தலின்​படி மூத்த ஐஏஎஸ் அதி​காரி அனில் துடேஜா, அன்​றைய கலால் துறை தலை​வர் திரி​பா​தி, தொழில​திபர் அன்​வர் தபேர் ஆகியோர் இணைந்து ரகசிய குழு ஒன்றை அமைத்​தனர்.

இந்த குழு, மது​பான ஆலைகளிடம் இருந்து மது​பானங்​களை கொள்​முதல் செய்ய கமிஷன் பெற்று அப்​போதைய ஆட்​சி​யாளர்​களிடம் அளித்​தது. இதன்​படி 12 மது பாட்​டில்​கள் அடங்​கிய ஒரு பெட்​டிக்கு ரூ.75 முதல் ரூ.100 வரை கமிஷன் வசூல் செய்​யப்​பட்​டது. மேலும் அரசு மது​பானக் கடைகளில் போலி ரசீதுகள், போலி மது​பானங்​கள் மூல​மும் மிகப்​பெரிய அளவில் மோசடி நடை​பெற்​றது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை சுமார் ரூ.3,200 கோடிக்​கும் அதி​க​மாக ஊழல் நடை​பெற்​றிருக்​கிறது. இதில் முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் மகன் சைதன்யா பாகேலுக்கு மிக நெருங்​கிய தொடர்பு இருக்​கிறது. இந்த வழக்​கில் 29 அரசு அதி​காரி​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது. வழக்கு தொடர்​பாக சைதன்யா பாகேல் உட்பட இது​வரை 14 பேர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். இவ்​வாறு அமலாக்​கத் துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

முன்​னாள் முதல்​வர் பூபேஷ் பாகேல் கூறும்​போது, “இன்று எனது மகனுக்கு பிறந்த நாள். ஏற்​கெனவே திட்​ட​மிட்டு பிறந்த நாளில் எனது மகனை கைது செய்​துள்​ளனர். சத்​தீஸ்​கரில் அதானி குழு நிலக்​கரி சுரங்க திட்​டத்​துக்கு எதி​ராக எனது மகன் பல்​வேறு போராட்​டங்​களை முன்​னெடுத்​துச் சென்​றார். இதற்கு பழி​வாங்​கும் வகை​யில் அவரை கைது செய்​துள்​ளனர்’’ என்று தெரி​வித்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.