மான்செஸ்டர்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
இதனையொட்டி இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று மான்செஸ்டர் சென்றடைந்தனர். அங்கு மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியினரை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியினர் அவர்களுடன் ஜாலியாக உரையாடினார்.
அத்துடன் இரு அணிகளும் தங்களது ஜெர்சியை மாற்றிக்கொண்டு குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.