Ind vs Eng: 2023 ஒருநாள் உலக கோப்பைக்கு பின்னர் காயம் காரணமாக ஓரண்டு மேல் ஓய்வெடுத்து சமீபத்தில் இந்திய டி20 அணிக்கு திரும்பினார் முகமது ஷமி. இருப்பினும் முழு உடல் தகுதி அடையாததால், இன்னும் சரிவர அணிக்கு திரும்பாமல் உள்ளார். அவர் தற்போது நடைபெற்று ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையிலாவது பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கபட்ட நிலையில், முழு உடற்தகுதியை எட்டாததால், அவர் பங்கேற்கவில்ல. இந்த நிலையில், மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் ஷமி
அவர் வர இருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் சீசனுக்காக வங்காள அணியின் உத்தேச வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதனால் அவர் அந்த அணிக்காக விளையாடுவார் என எதிர்ப்பர்க்கப்படுகிறது. ஒருவேளை முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டால், இம்முறை மண்டல அடிப்படையில் நடைபெற உள்ள துலீப் கோப்பை 2025ல் கிரிக்கெட் மண்டல அணியில் இடம் பெறுவார். முகமதில் ஷமி இத்தொடரில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது.
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ராவே உள்ளார். அதே சமயம் பும்ராவையே இந்திய அணியும் முழுக்க முழுக்க நம்பி உள்ளது. முகமது ஷமி இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழையும் பட்சத்தில் பும்ராவுடன் சேர்ந்து தனது திறமையை வெளிப்படுத்துவார். இது இந்திய அணிக்கு மிகவும் தேவையான ஒன்று.
அஜித் அகர்கர்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி அறிவிப்பின் போது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குறித்து தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் கூறியதாவது, இந்த தொடருக்கு முகமது ஷமி இன்னும் தகுதி பெறவில்லை என மருத்துவக் குழு எங்களிடன் தெரிவித்துள்ளது. அவர் இத்தொடருக்கு தயாராக முயற்சித்தார். ஆனால், கடந்த வாரம் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவரால் 5 போட்டிகளில் விளையாட முடியும் என நினைக்கவில்லை. மாறாக தொடரின் சில போட்டிகளாவது அவர் விளையாடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது தயாராக இல்லை. இது துரதிர்ஷ்டவசமானது. அவரை போல் ஒரு ப்பந்து வீச்சாளரை எப்போது தேர்வு செய்ய விரும்புவோம் என அவர் கூறியிருந்தார்.
துலீப் கோப்பை எப்போது?
துலீப் கோப்பை வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: அதிரடி வீரரை கழட்டிவிடும் CSK… கொத்தித் தூக்கப்போகும் இந்த 3 அணிகள்!
மேலும் படிங்க: இந்திய அணிக்குள் வரும் வெறித்தனமான சிஎஸ்கே பௌலர்… அர்ஷ்தீப் சிங் அவுட்!