IPL 2026 Mini Auction: ஐபிஎல் 2025 தொடர் நிறைவடைந்து, ஒன்றரை மாதக் காலம் நிறைவடைந்திருக்கும். ஆனால் அதற்குள்ளேயே ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. மேலும், குறிப்பாக ஐபிஎல் 2026 டிரேடிங் பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பால் விறுவிறுப்பும் அதிகரித்துவிட்டது.
IPL 2026 Mini Auction: மினி ஏலத்திற்கு ரெடியாகும் அணிகள்
ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதத்திற்கு நடைபெறும் என்பதால் ஒவ்வொரு அணியும் எந்த அணியுடன் வீரர்களை டிரேட் செய்யலாம், மினி ஏலத்தில் யார் யாரை தக்கவைத்து, யார் யாரை விடுவிக்கலாம் என்பதை திட்டமிட்டு வருவார்கள். அது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் மனி ஏலத்தில் சில புதிய வீரர்களும் என்ட்ரி கொடுப்பார்கள்.
அந்த வகையில், மெகா ஏலத்தில் பதிவு செய்திருந்த கேம்ரூன் கிரீன் வரும் மினி ஏலத்தில் பலராலும் எதிர்பார்க்கப்படக் கூடிய வீரராக இருப்பார். 2025 சீசனில் சொதப்பிய அணிகள், தங்களுக்கு தேவைப்படாத வீரர்களை விடுவித்து தங்களின் பர்ஸை பலப்படுத்திக்கொண்டு மினி ஏலத்திற்கு ரெடியாகும் எனலாம்.
IPL 2026 Mini Auction: கேம்ரூ் கிரீனுக்கு காத்திருக்கும் இந்த 3 அணிகள்
2023இல் மும்பை இந்தியன்ஸ், 2024இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளில் விளையாடிய கேம்ரூன் கிரீன் கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னரே காயத்தை அறிவித்ததால் ஆர்சிபியும் அவரை மெகா ஏலத்திற்கு விடுவித்தது, யாரும் அவரை ஏலத்திலும் தேர்வு செய்யவில்லை. அப்படியிருக்க, இந்த மினி ஏலத்தில் கேம்ரூன் கிரீன் வந்தால் இந்த 3 அணிகள் நிச்சயம் அவருக்கு குறிவைக்கும்.
KKR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கேகேஆர் அணி பலமான அணியை கட்டமைத்தாலும் அவர்கள் நம்பிய வீரர்கள் அவர்களுக்கு கைக்கொடுக்கவில்லை. கேப்டனும் சரியாக அமையவில்லை. நிச்சயம் கேகேஆர் அணி ரூ.23.75 கோடிக்கு எடுத்த வெங்கடேஷ் ஐயரை அணியில் இருந்து விடுவித்துவிட்டு ஒரு வேகப்பந்துவீச்சாளரான கேம்ரூன் கிரீனின் மேல் அதிகம் முதலீடு செய்ய திட்டமிடும். இதனால் ரஸ்ஸல் அடுத்த சில சீசன்களில் விலகினாலும் நம்பிக்கையான பேட்டரை மிடில் ஆர்டரில் பெறலாம். வேகப்பந்துவீச்சு ஆப்ஷனும் கிடைக்கும்.
RR: ராஜஸ்தான் ராயல்ஸ்
ஆர்ஆர் அணிக்கு இந்த சீசனில் பெரிய பிரச்னையாக அமைந்ததே சரியான ஃபினிஷர் இல்லை என்பதால்தான். கேம்ரூன் கிரீன் நம்பர் 5இல் இறங்கி கடைசி கட்டத்தில் சிக்ஸர் அடிக்கும் திறன் கொண்டவர். எனவே ஹெட்மயரை விடுவித்து இவரை அந்த இடத்தில் விளையாட வைக்கலாம். துருவ் ஜூரேலை கீழே விளையாட வைத்தால், கேம்ரூன் கிரீன் மிடில் ஆர்டரையும் பலப்படுத்துவார்.
CSK: சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை அணியும் ஒரு வெளிநாட்டு ஆல்-ரவுண்டரை பல ஆண்டுகளாக தேடி வருகிறது. பிராவோவுக்கு பின்னர் அந்த இடத்தில் இன்னும் சரியான வீரர் கிடைக்கவில்லை. சாம் கரன், ஜேமி ஓவர்டன் ஆகியோரில் ஒருவரை நிச்சயம் சிஎஸ்கே விடுவிக்கும். அதுமட்டுமின்றி அதிக தொகை கொண்ட வீரர்களில் ஓரிருவரை வெளியேற்றும்பட்சத்தில் சிஎஸ்கே இவரை எடுத்து மிடில் ஆர்டரில் பொருத்திக் கொள்ளும்.
மேலும் படிக்க | தோனியின் இடத்தில் ரிங்கு சிங்? கேகேஆர் – சிஎஸ்கே இடையே ஒப்பந்தம்!
மேலும் படிக்க | அதிரடி வீரரை கழட்டிவிடும் CSK… கொத்தித் தூக்கப்போகும் இந்த 3 அணிகள்!
மேலும் படிக்க | உற்றுநோக்கும் CSK… டிரேட் செய்யப்படும் இந்த 3 வீரர்கள் – யார் யார் தெரியுமா?