கோழிக்கோடு கேரள மாநில முன்னாள் முதல்வர் வி எஸ் அச்சுதானந்தன் மரணம் அடைந்துள்ளார். கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன் (102) உடல்நலக் குறைவால் காலமானார். வெளிக்கக்கது சங்கரன் அச்சுதானந்தன் என்ற வி.எஸ்.அச்சுதானந்தன் ஆலப்புழாவில் உள்ள புன்னப்புராவில் 1923 அக்.20ல் பிறந்தார். 4 வயதிலேயே தாயையும் 11 வயதில் தனது தந்தையையும் இழந்தார். 23வது வயதிலேயே புன்னப்புரா போராட்டத்தின் மிக முக்கியமான போராளிகளில் ஒருவராக திகழ்ந்தார். 2006 முதல் 2011ம் ஆண்டு வரை கேரளாவின் முதலமைச்சராக அச்சுதானந்தன் இருந்தார். […]
