முடிந்தால் அதை செய்யுங்கள் – இந்திய கிரிக்கெட் அணிக்கு பாக்.முன்னாள் வீரர் சவால்

கராச்சி,

2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இங்கிலாந்தில் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் என மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் என மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த போட்டியில் களம் காணும் இந்திய அணிக்கு யுவராஜ் சிங் தலைமை தாங்குகிறார்.

ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, பியுஷ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், வினய் குமார், அபிமன்யு மிதுன், சித்தார்த் கவுல், குர்கீரத் மான் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த போட்டி தொடரில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் சயித் அப்ரிடி தலைமையினான பாகிஸ்தான் அணியை பர்மிங்காமில் நேற்று சந்திக்க இருந்தது. ஆனால் இந்திய அணியின் ஷிகர் தவான் உள்ளிட்ட சில வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தை புறக்கணிப்பதாக போட்டி அமைப்பு குழுவினருக்கு ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.

பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதால் அந்த நாட்டை சேர்ந்த அணியினருடன் தங்களால் விளையாட முடியாது என்று மறுத்து விட்டனர். இதனால் நேற்று நடக்க இருந்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பு குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த தொடரில் விலகிய இந்தியா முடிந்தால் ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடாமல் விலகுமா? என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் சல்மான் பட் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “உலகம் முழுவதும் அவர்களைப் (இந்திய கிரிக்கெட் அணி) பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் ரசிகர்களுக்கும் என்ன செய்தியை அனுப்பியுள்ளனர்? அவர்கள் என்ன நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்? இனிமேல் எங்களுடன் உலகக்கோப்பையில் மட்டுமின்றி எந்த ஐசிசி தொடரிலும் விளையாட வேண்டாம். இதை ஒரு வாக்குறுதியாகக் கொடுங்கள். பாருங்கள், எல்லாவற்றுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

ஆனால் இப்போது நீங்கள் எந்த மட்டத்திலும் எங்களுக்கு எதிராக விளையாட வேண்டாம். ஒலிம்பிக்கில் கூட வேண்டாம். முடிந்தால் அதைச் செய்யுங்கள். நான் பார்க்க விரும்புகிறேன். இந்த முடிவை யார் எடுத்தார்கள்? வெறும் 4 – 5 இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவில்லை. அவர்களால் விளையாட விரும்பிய மற்ற இந்திய வீரர்களும் அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டார்கள். இதை இப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதற்கான பதிலடிகளை நாங்கள் இந்தியாவுக்கு நினைவூட்டுவோம்” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.