மும்பை ஏர் இந்தியா விமானம் மும்பையில் ஓடு பாதையை விட்டு விலகி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ஏ.ஐ.2744 விமானம், மும்பை விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. மும்பையில் கனமழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து சற்று விலகிச் சென்றது. ஆயினும் விமானம் எந்த பிரச்சினையும் இன்றி பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் […]
