மாஸ்கோ,
இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா கடந்த 22-ம் தேதி ஈரான் மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டது. அங்குள்ள அணு உலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சண்டைக்கு மத்தியில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராசி ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது புதின் ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கருத்துகளை கூறினார். இந்தநிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் மூத்த ஆலோசகர் அலிலரி ஜானி மாஸ்கோ சென்று ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது மேற்கு ஆசியாவில் நிலவும் மோசமான நிலைமை குறித்தும் ஈரானின் அணு சக்தி திட்டத்தின் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். இஸ்ரேல் – ஈரான் மோதலை தணிக்க அலி லரி ஜானிக்கு ஆதரவு அளிப்பதாக புதின் உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.