Suresh Raina: இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடரின் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இத்தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. அதில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியை இங்கிலாந்து அணி வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது போட்டி நாளை மறுநாள் (ஜூலை 23) இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏனென்றால், இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால், இங்கிலாந்து அணி 3வது வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றிவிடும். எனவே இந்திய அணிக்கு இப்போட்டி வாழ்வா? சாவா? போட்டியாக மாறி உள்ளது.
இந்திய அணி வெல்லும்
எனவே இந்திய அணி இப்போட்டியை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதனால், இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் இங்கிலாந்து அணி எப்படியாவது இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இத்தொடரை வெல்லப்போவது யார்? என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார். அவர் இந்திய அணி இத்தொடரை 3-2 என்ற கணக்கில் வெல்லும் என நம்புவதாக தெரிவித்தார்.
சுரேஷ் ரெய்னா கருத்து
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்திய அணிதான் இந்த தொடரை வெல்லும் என நான் நம்புகிறேன். அவர்களால் இத்தொடரை 3-2 என்ற கணக்கில் வெல்ல முடியும். சுப்மன் கில் கேப்டனாகவும் பேட்ஸ்மனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் ஆகியோரும் அசத்தலாக பேட்டிங் செய்து வருகின்றனர். பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் இந்திய அணியால் இத்தொடரை கைபற்ற முடியும் என நம்புகிறேன் என சுரேஷ் ரெய்னா கூறினார்.
மேலும் படிங்க: 17 கிலோ உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போன சர்பராஸ் கான்.. எப்படி ஆய்டாரு பாருங்க!
மேலும் படிங்க: மாபெரும் சாதனையை படைக்க இருக்கும் கே.எல்.ராகுல்.. இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் நிகழ்த்துவாரா?