மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் பாங்காங்கில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் உயர்ரக கஞ்சா கடத்தி வந்த 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒரு பயணியிடம் இருந்து 5,256 கிராமும், மற்றொரு பயணியிடம் 1,452 கிராமும், மேலும் ஒரு பயணியிடம் 10 கிராமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் கமிஷன் பணத்துக்கு ஆசைப்பட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 25 லட்சம் ஆகும்.
கைதான 3 பயணிகள் மீதும் போதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இவர்களை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட வைத்த கும்பல்களை அடையாளம் காண தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.