ஜம்மு, –
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ரியாசி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பெய்த மழையில் மஹோர் தாலுகாவின் படோரா மலைப்பகுதியில் ஒரு சிவன் கோவில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் கோவில் செல்லும் பாதையை சீரமைக்க வந்த தொழிலாளர்கள் தங்கி இருந்த கூடாரம் மீது மண், கற்கள் சரிந்து விழுந்தன. அப்போது கூடாரத்தில் தூங்கி கொண்டு இருந்த 2 தொழிலாளர்கள் பலியானார்கள். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி இருந்த 2 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :