மாலே,
பிரதமர் மோடி மாலத்தீவில் மேற்கொண்ட 2 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து தூத்துக்குடிக்கு இன்று தனி விமானத்தில் புறப்பட்டார். அவர் இன்றிரவு 8 மணியளவில், தூத்துக்குடி வருகை தருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. மற்றும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சிக்கு இன்று வருகை தரும் மிகமுக்கிய நபர்களின் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் விமான நிலையத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது. தூத்துக்குடி விமான நிலையத்தில், விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இன்று பயண நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியின் தமிழகத்திற்கான இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து, ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து நாளைக்கு திருச்சிக்கு சென்று தங்குகிறார். பின்னர் ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் கோவிலை பார்வையிட்டு கலை, கலாசார விழாவில் கலந்து கொள்கிறார்.