இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கான், தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 27 வயதான மும்பை வீரர், வெறும் 2 மாதத்தில் 17 கிலோ எடையை குறைத்துள்ளார். ஜிம் செல்லாமல், அறுவை சிகிச்சை இல்லாமல், வெறும் உணவு மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சியால் இந்த சாதனையை அவர் அடைந்துள்ளார். அவரது தந்தை நௌஷாத் கான், இந்த மாற்றத்தின் பின்னணி குறித்து பேசியுள்ளார். ரொட்டி, அரிசி, சர்க்கரை, மாவு, பேக்கரி உணவுகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து, கிரில் செய்த இறைச்சி, முட்டை, காய்கறிகள், அவகேடோ போன்றவற்றை உணவில் சேர்த்ததே இந்த வெற்றியின் ரகசியம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: ஆர்சிபி வீரர் மீது POCSO வழக்கு.. கிரிக்கெட் வீராங்கனையை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை!
View this post on Instagram
சர்ஃபராஸ் கான்
சர்ஃபராஸ் கான் இந்திய அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார். அவரது உடல் எடை அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகியது. இந்நிலையில் 2025 இங்கிலாந்து தொடருக்கு முன்பு அவர் தனது உடலை மொத்தமாக மாற்றி உள்ளார். சர்ஃபராஸின் எடை குறைப்பு, உணவு மாற்றங்களால் 80% சாத்தியமானது. அவர் ரொட்டி, அரிசி, சர்க்கரை, மாவு, பேக்கரி உணவுகள் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் தவிர்த்துள்ளார். இவை உடலில் கொழுப்பை சேர்க்கும், இன்சுலின் அளவை அதிகரிக்கும். அதற்கு பதிலாக, கிரில் செய்த மீன், கோழி, வேகவைத்த முட்டை, ஸ்ப்ரவுட்ஸ், சாலட், ப்ரோக்கோலி, வெள்ளரி, அவகேடோ போன்றவற்றை உணவில் சேர்த்துள்ளார்.
கிரீன் டீ மற்றும் கிரீன் காபி தொடர்ந்து குடித்துள்ளார். இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். பிரியாணி போன்ற உணவுகளை கூட தவிர்த்துள்ளார். இந்த டயட், 1.5 மாதங்களுக்குள் 10 கிலோ இழக்க உதவியது, பின்னர் மேலும் 7 கிலோவை குறைத்துள்ளார். உணவு மாற்றங்கள், உடற்பயிற்சியை விட 80% பங்களிப்பு செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சர்ஃபராஸ் ஜிம் செல்லாமல், வீட்டு உடற்பயிற்சிகளை செய்துள்ளார். காலை 4:15 மணிக்கு எழுந்து, 4:30 மணிக்கு நீண்ட தூர ஓட்ட பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ச்சியாக செய்தது அவரது உடல் தகுதியை மேம்படுத்தி உள்ளார்.
சர்ஃபராஸின் வெற்றி, உடல் எடை குறைப்புக்கு உணவு கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கான உடற்பயிற்சி போதும் என்பதை காட்டுகிறது. அவர் கார்போஹைட்ரேட்களை குறைத்து, புரதம், இழைச்சத்து உணவுகளை அதிகரித்தார். இது இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி, கொழுப்பை எரிக்கும். உடற்பயிற்சி 20% பங்களிப்பு செய்தாலும், அது அவசியம். உணவை நன்றாக மென்று உண்ணுதல், 6 மணிக்கு முன் இரவு உணவு, தூங்கும் முன்பு மொபைல் தவிர்ப்பு பழக்கங்களை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சர்ஃபராஸ் போல் வெற் பலருக்கு உத்வேகம் அளிக்கும். சர்ஃபராஸ் இந்த மாற்றத்தால் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்.
மேலும் படிங்க: குப்பை பந்துவீச்சு’ பும்ராவை விளாசி தள்ளிய ரவி சாஸ்திரி