இந்திய கிரிக்கெட் அணி இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கிலாந்து அணி 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு அருகாமையில் உள்ளது. ஆனால், இந்திய அணி 5வது நாள் ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் டிரா செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதாவது வெற்றியை பெற முடியாவிட்டாலும், தோல்வியை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இப்போது இந்திய அணி வசம் உள்ளது. அதற்கு இந்திய பிளேயர்கள் கட்டாயம் நன்றாக பேட்டிங் ஆட வேண்டும்.
இந்த சூழலில் இந்திய அணி அண்மைக் காலமாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைவதற்கு என்ன காரணம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் நவ்ஜோத் சிங் சித்து பட்டியலிட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளைப் பெறுத்தவரை தனி ஒரு பிளேயரால் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார். சரியான பிளேயர்களின் காம்பினேஷன் இருந்தால் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை பெற முடியும் என நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். தனி ஒரு பிளேயர்களின் ஆட்டம் அணியை முதன்மையான இடத்துக்கு கொண்டு செல்லும் என்றாலும் எல்லா நேரமும் அது போட்டியை வெற்றி பெற்று கொடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு அணியாக எல்லா பிளேயர்களும் ஒரு போட்டியில் பங்களிப்பு செய்தால் மட்டுமே வெற்றி வாகை சூட முடியும், ஆனால் இப்போதைய இந்திய அணியில் பிளேயர்களின் காம்பினேஷன் சரியாக இல்லை என கூறியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீரின் அணுகுமுறை சரியில்லை என தெரிவித்துள்ள சித்து, கம்பீர் தனிப்பட்ட பிளேயர்களை நம்பியிருப்பதாக கூறியுள்ளார். இந்தியா போன்ற திறமையாளர்கள் அதிகம் இருக்கும் அணிக்குள் அவர் பயிற்சியாளராக பிளேயர்களின் காம்பினேஷனை உருவாக்கியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள சித்து, அப்படி ஏதும் கம்பீர் உருவாக்கவில்லை என கூறியுள்ளார். இதுதவிர இன்னும் பல கடுமையான விமர்சனங்களை கவுதம் கம்பீர் மீது அவர் கூறியுள்ளார்.
மேலும் படிங்க: டெஸ்ட்டில் முதன்முறையாக.. பும்ரா செய்த மோசமான சாதனை.. முழு விவரம்!
மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஓய்வு பெறுகிறாரா? அதிர்ச்சி தகவல்!